CBSE | Language | DMK | "3வது மொழித்தேர்வு கட்டாயம்.." திமுக கடும் கண்டனம்
9, 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மூன்றாவது மொழித் தேர்வு கட்டாயம் என்ற சிபிஎஸ்இ-யின் புதிய அறிவிப்புக்கு திமுக எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது மறைமுக மொழித் திணிப்பு எனச் சாடியுள்ள அவர், இருமொழிக் கொள்கையிலேயே தமிழ்நாடு உறுதியாக உள்ளது என்றும், மாநிலங்களின் கல்வி உரிமையில் ஒன்றிய அரசு தலையிடுவதை ஏற்க முடியாது என்றும் குறிப்பிட்டுள்ளார். சிபிஎஸ்இ இந்தச் சுற்றறிக்கையை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்றும், மொழித் திணிப்புக்கு எதிரான போராட்டம் தொடரும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
