

சி.பி.எஸ்.இ. தேர்வுகளை ரத்து செய்யக் கோரி அமித் பத்லா உச்ச நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், ஏற்கெனவே நடத்தப்பட்ட தேர்வுகளின் அடிப்படையிலும், எஞ்சியுள்ள பாடங்களுக்கான, அகநிலை மதிப்பீடு மதிப்பெண்களின் சராசரி அடிப்படையில் வழங்கவும் சி.பி.எஸ்.இ. வாரியத்துக்கு உத்தரவிட மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், செவ்வாய்க்கிழமைக்குள் பதிலளிக்க சிபிஎஸ்இக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.