அதிகாரிக்கு ரூ.2 கோடி லஞ்சம் கொடுக்க முயற்சி -கட்டுமான நிறுவனத்தின் நிர்வாகி கைது- சிபிஐ

டெல்லியில் சிபிஐ அதிகாரிக்கு ரூ.2 கோடி லஞ்சம் கொடுக்க முயன்ற சென்னை கட்டுமான நிறுவனத்தின் துணை தலைவரை சிபிஐ கைது செய்துள்ளது.
அதிகாரிக்கு ரூ.2 கோடி லஞ்சம் கொடுக்க முயற்சி -கட்டுமான நிறுவனத்தின் நிர்வாகி கைது- சிபிஐ
Published on

சென்னை வானகரத்தில் செயல்பட்டு வரும் தனியார் கட்டுமான நிறுவனத்தின் துணை தலைவர் ராமச்சந்திர ராவே கைது செய்யப்பட்டவர். வழக்கு ஒன்றில் கட்டுமான நிறுவனத்திற்கு சாதகமாக நடவடிக்கை எடுப்பதற்காக சிபிஐ உயர் அதிகாரிக்கு ராமச்சந்திர ராவ் ரூ.2 கோடி லஞ்சம் கொடுக்க முயன்றுள்ளார். சிபிஐ டிஐஜி அஸ்ரா கார்க் கொடுத்த புகாரின் அடிப்படையில், ராமச்சந்திர ராவ் கைது செய்யப்பட்டுள்ளார். முன்னதாக லஞ்சம் கொடுக்க முயன்ற விவகாரத்தில் இடைத்தரகராக செயல்பட்ட உள்துறை அமைச்சகத்தில் பணிபுரியும் தீரஜ்குமார் சிங் மற்றும் தினேஷ் ஆகியோரையும் போலீசார் அதிரடியாக கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அவர்களிடம் இருந்து 16 லட்சம் ரூபாய் பணமும் பறிமுதல் செய்யப்பட்டது.

X

Thanthi TV
www.thanthitv.com