அமைச்சர் நேரு தம்பி மீதான CBI வழக்கு - ED-க்கு கிடைத்த அனுமதி

x

சிபிஐ பதிவு செய்த மோசடி வழக்கை ரத்து செய்யக் கோரி, அமைச்சர் நேருவின் சகோதரர் என்.ரவிச்சந்திரன் தாக்கல் செய்த வழக்கில், அமலாக்கத் துறை இடையீட்டு மனு தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. கடந்த 2013-ஆம் ஆண்டு 30 கோடி ரூபாய் வங்கிக் கடனை மோசடி செய்ததாக என்.ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் மீது 2021-ஆம் ஆண்டு சிபிஐ வழக்குப் பதிவு செய்தது. இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி ரவிச்சந்திரன் தாக்கல் செய்த வழக்கில், இடையீட்டு மனு தாக்கல் செய்ய அமலாக்கத் துறை அனுமதி கோரியது. அதை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம், இடையீட்டு மனு தாக்கல் செய்ய அனுமதித்து, விசாரணையை ஜூன் 12-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.


Next Story

மேலும் செய்திகள்