கடைமடைக்கு வராத காவிரி தண்ணீர் : நீரின்றி விதைகள் மக்கும் சூழல்

குடிமராமத்து பணிகள் காலதாமதமாக நடைபெறுவதால், காவிரி தண்ணீர் கடைமடையில் தடம் பதிக்கவில்லை என நாகை விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
கடைமடைக்கு வராத காவிரி தண்ணீர் : நீரின்றி விதைகள் மக்கும் சூழல்
Published on

குடிமராமத்து பணிகள் காலதாமதமாக நடைபெறுவதால், காவிரி தண்ணீர் கடைமடையில் தடம் பதிக்கவில்லை என நாகை விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். காவிரி நீர் வராததால், சுமார் 5 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில், நேரடியாக விதைக்கப்பட்ட நெல் விதைகள் மக்கும் சூழல் ஏற்பட்டுள்ளதாக அவர்கள் கவலை அடைந்துள்ளனர். தங்களின் நலன் கருதி, போர்க்கால அடிப்படையில் கடைமடைப் பகுதியில் உள்ள கிளை வாய்க்கால்களில் குடிமராமத்து பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

X

Thanthi TV
www.thanthitv.com