

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி, கடந்த 2016 ஆம் ஆண்டு, எழும்பூர் ரயில் நிலையத்தை முற்றுகையிட்டு, அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்டோர் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு, சென்னையில் உள்ள எம்பிக்கள் மற்றும் எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. வைகோ, திருமாவளவன் உள்ளிட்ட 3 பேரும் விசாரணைக்கு நேரில் ஆஜரான நிலையில், அவர்களுக்கு எதிராக குற்றச் சாட்டுக்கள் பதிவு செய்யப்பட்டன. இதையடுத்து, அரசு தரப்பு சாட்சி விசாரணையை அடுத்த மாதம் 4 ம் தேதிக்கு நீதிபதி ரமேஷ் தள்ளிவைத்தார்.