குறுவை சாகுபடிக்கு தயாராகும் காவிரி டெல்டா - முதலமைச்சருக்கு டெல்டா விவசாயிகள் நன்றி

காவிரி டெல்டா மாவட்டங்களில் நீர் தேக்கங்களை தூர்வாரி குறுவை சாகுபடிக்கு வழிவகை செய்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு அப்பகுதி விவசாயிகள் நன்றி தெரிவித்துள்ளனர்.
குறுவை சாகுபடிக்கு தயாராகும் காவிரி டெல்டா - முதலமைச்சருக்கு டெல்டா விவசாயிகள் நன்றி
Published on

நாமக்கல், ஈரோடு, கரூர், திருச்சி, தஞ்சாவூர், அரியலூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை ஆகிய டெல்டா மாவட்டங்களில் நீர் நிலைகளை தூர்வாரும் பணி அதி வேகமாக நடைபெற்று வருகிறது. 809 இயந்திரங்கள் உதவியுடன் 173 பொறியாளர்கள் களப்பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இதற்காக சிறப்பு நடவடிக்கை மேற்கொண்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு காவிரி டெல்டா விவசாயிகள் நன்றி தெரிவித்துள்ளனர். நடப்பாண்டு 3 புள்ளி 50 லட்சம் ஏக்கர் பரப்பளவில் குறுவை சாகுபடி மேற்கொள்ளப்பட உள்ளதாகவும், கடந்தாண்டை விட அரிசி உற்பத்தில் ஒரு லட்சம் மெட்ரிக் டன் கூடுதலாக மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

X

Thanthi TV
www.thanthitv.com