சிறுமி உயிரை மாய்த்துக் கொண்ட வழக்கு - தந்தை, சித்திக்கு சிறை
சென்னை ஓட்டேரியில், 16 வயது சிறுமி தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில், சிறுமியின் சித்தி மற்றும் தந்தை கைது செய்யப்பட்டுள்ளனர். மேட்டுப்பாளையம் அருந்ததி நகர் எலிகான் தெருவில் வசித்து வந்த நந்தினி என்ற சிறுமி தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்டார். இந்த சம்பவத்தில் அப்பகுதியை சேர்ந்தவர்கள் சிறுமியை கொடுமை செய்த சித்தி உஷாவையும், தந்தை அமர்நாத் இருவரையும் கைது செய்யக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்திய நிலையில், உஷா மற்றும் அமர்நாத் இருவரும் சிறுமி நந்தினியை கொடுமை செய்தது உறுதியானது. இதனை தொடர்ந்து போலீசார் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Next Story