'அத்திவரதர் தரிசனத்திற்கு வரும் பக்தர்களுக்கு பாதுகாப்பு இல்லை', சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு

அத்தி வரதர் தரிசனத்திற்கு வரும் பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
'அத்திவரதர் தரிசனத்திற்கு வரும் பக்தர்களுக்கு பாதுகாப்பு இல்லை', சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு
Published on

அத்தி வரதர் தரிசனத்திற்கு வரும் பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. ராதாகிருஷ்ணன் என்பவர் தாக்கல் செய்த மனுவில், பக்தர்களுக்கு தேவையான எந்த வசதிகளையும் மாவட்ட நிர்வாகம் செய்து தரவில்லை என்று குற்றஞ் சாட்டியுள்ளார். தரிசன நேரத்தை குறைப்பதாக கிளம்பிய வதந்தி காரணமாக ஏற்பட்ட நெரிசலில் 4 பேர் உயிரிழந்து உள்ளதாகவும், அதனால் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ளும் படி மத்திய,மாநில அரசுகளுக்கு உத்தரவிடக் கோரி மனுதாரர் வலியுறுத்தியுள்ளார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரஉள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com