ஆரத்தி பெண்களுக்கு பணம் கொடுத்த விவகாரம் - அமைச்சர் சி.வி.சண்முகம் மீது வழக்குப்பதிவு

தேர்தல் பிரசாரத்தின் போது ஆரத்தி எடுத்த பெண்களுக்கு பணம் வழங்கிய விவகாரம் தொடர்பாக விழுப்புரம் தொகுதி அதிமுக வேட்பாளரும், அமைச்சருமான சி.வி. சண்முகம் உள்ளிட்ட 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
ஆரத்தி பெண்களுக்கு பணம் கொடுத்த விவகாரம் - அமைச்சர் சி.வி.சண்முகம் மீது வழக்குப்பதிவு
Published on

தேர்தல் பிரசாரத்தின் போது ஆரத்தி எடுத்த பெண்களுக்கு பணம் வழங்கிய விவகாரம் தொடர்பாக விழுப்புரம் தொகுதி அதிமுக வேட்பாளரும், அமைச்சருமான சி.வி. சண்முகம் உள்ளிட்ட 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கடந்த 31-ந் தேதி விழுப்புரம் நகர பகுதியில் சி.வி.சண்முகம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். வண்டிமேடு, அலமேலுபுரம் பகுதியில் பிரசாரம் மேற்கொண்ட போது ஆரத்தி எடுத்த பெண்களுக்கு அதிமுக வேட்பாளர் சி.வி. சண்முகம் அன்பளிப்பாக பணம் கொடுத்ததாக புகார் எழுந்தது. இது குறித்து விழுப்புரம் தொகுதி தேர்தல் பறக்கும் படை அலுவலர் சந்துரு போலீசில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் சி.வி. சண்முகம் உள்ளிட்ட 2 பேர் மீது 2 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளன

X

Thanthi TV
www.thanthitv.com