அத்தை ஜெயலலிதா மீதான வழக்கு.. ரூ.36 கோடியை கட்ட ஜெ.தீபாவுக்கு IT நோட்டீஸ்..

x

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான வருமான வரி வழக்கில், தீபா 36 கோடி ரூபாய் செலுத்தக் கூறி, அனுப்பப்பட்ட நோட்டீசுக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த நோட்டீசை எதிர்த்து, தீபா தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு விசாரணைக்கு வந்த போது, சட்டப்படி 15 நாட்கள் அவகாசம் வழங்கப்பட வேண்டும். ஆனால், ஏழு நாட்களில் வருமான வரியை செலுத்தவேண்டும் என வருமான வரித்துறையின் நோட்டீசுக்கு இடைக்கால தடை விதிக்க தீபா தரப்பில் வாதிடப்பட்டது. வாதங்களை கேட்ட நீதிபதி, வருமான வரிதுறையின் நோட்டீசுக்கு இடைக்கால தடை விதித்து, மனுவுக்கு செப்டம்பர் 2 ஆம் தேதிக்குள் பதிலளிக்கும்படி வருமான வரித்துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்