Accident | நேருக்கு நேர் மோதிய கார்கள் - 3 வயது குழந்தை உட்பட பலருக்கு நேர்ந்த கோரம்

நேருக்கு நேர் மோதிய கார்கள் - 3 வயது குழந்தை உட்பட பலருக்கு நேர்ந்த கோரம்

Thiruvarur | Accident | நேருக்கு நேர் மோதிய கார்கள் - 3 வயது குழந்தை உட்பட பலருக்கு நேர்ந்த கோரம்

திருவாரூரில் 2 கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்து - 10 பேர் படுகாயம் திருவாரூர் வட்டாட்சியர் அலுவலகம் எதிரே இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில், 3 வயது குழந்தை உட்பட 10 பேர் படுகாயமடைந்தனர். தஞ்சாவூரில் இருந்து வேளாங்கண்ணி நோக்கி சென்ற காரும், நாகப்பட்டினத்தில் இருந்து அம்மையப்பன் நோக்கி வந்த காரும் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டது. தகவலறிந்து விரைந்த பொதுமக்கள் காயமடைந்தவர்களை மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அனைவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Thanthi TV
www.thanthitv.com