காவலர் மீது காரை மோதிய வாலிபர்.. சினிமாவை மிஞ்சிய சேஸிங்... தட்டி தூக்கிய போலீஸ்

x

விழுப்புரத்தில் புகையிலை பொருட்களை கடத்தி வந்த நபர், போலீஸ் மீது காரை ஏற்றிவிட்டு தப்ப முயன்ற போது, போலீசார் விரட்டி சென்று மடக்கி பிடித்தனர். தென்னமாதேவி சுங்கச்சாவடியில் சந்தேகத்திற்கிடமான காரை நிறுத்தி சோதனையிட்ட போது, ஓட்டுநர் திடீரென காரை இயக்கி போலீஸ் ஏட்டு மீது மோதிவிட்டு தப்ப முயன்றார். இதையடுத்து அந்த காரை போலீசார் தங்கள் ஜீப்பில் விரட்டிச்சென்று பிடித்தனர். அப்போது காரில் இருந்த 2 பேர் தப்பியோடிய நிலையில், ஒருவர் மட்டும் பிடிபட்டார். இதையடுத்து காரில் இருந்த190 கிலோ புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்