நேருக்கு நேர்.. மோதிக்கொண்ட Car, Bike - பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள்

x

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே காரும் , பைக்கும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். 2 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். சென்னப்ப நாயக்கனூர் பேருந்து நிறுத்தம் அருகே காரும், இருசக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இதில் வெங்கடாசலம், செந்தில் மற்றும் சத்யா ஆகிய மூவரும் படுகாயமடைந்த நிலையில் மேல் சிகிச்சைக்காக சேலம் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதில், செந்தில் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசர் விசாரித்து வருகின்றனர். விபத்தின் பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்