பெப்பர் ஸ்ப்ரே அடித்து கார் கடத்தல் : விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்

பெப்ப‌ர் ஸ்ப்ரே அடித்து காரை கடத்தி சென்ற நபர்களை பிடித்து விசாரித்த‌தில் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன.
பெப்பர் ஸ்ப்ரே அடித்து கார் கடத்தல் : விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்
Published on
புதுச்சேரி லாஸ் பேட்டை பகுதியை சேர்ந்த விஷ்ணுபிரசாத் என்பவர் தனது காரை விற்பனை செய்வதாக அறிவித்திருந்த நிலையில், எட்வின் என்பவர் அவரது நண்பருடன் வந்துள்ளார். வாகன உரிமை புத்தகத்தை விஷ்ணுவிடம் இருந்து பெற்ற எட்வின், திடீரென முகத்தில் மிளகாய் தூள் ஸ்பேரே அடித்துவிட்டு தனது நண்பருடன் காரில் பறந்தார். அதிர்ச்சியடைந்த விஷ்ணு பிரசாத், போலீசாரிடம் தகவல் தெரிவிக்க, போக்குவரத்து போலீசாருக்கு எச்சரிக்கை விடப்பட்டு ஓதியஞ்சாலை அருகே உப்பளம் சாலையில், திருடப்பட்ட காரை போலீஸ் மடக்கி பிடித்தனர். காரை சோதனையிட்டதில், கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த போலீசார், அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். அப்போது, முன்பகை காரணமாக, தனது உறவினர் ஒருவரை கொலை செய்வதற்காகவே காரை கடத்தி சென்றதாக பிடிப்பட்ட எட்வின் கூறியுள்ளார். அவர்களை கைது செய்த போலீசார், காலாப்பட்டு மத்திய சிறையில் அவர்களை அடைத்தனர்.
X

Thanthi TV
www.thanthitv.com