ஆட்டோவில் இடித்து இழுத்து சென்ற கார்.. அடுத்தடுத்து மோதிய பைக் - வாகனங்கள் நசுங்கி கோரம்

x

கட்டுப்பாட்டை இழந்த கார், ஆட்டோவில் மோதியதைத் தொடர்ந்து, மூன்று கார் மற்றும் ஒரு ஸ்கூட்டர் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானது.

கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகே கோதமங்கலத்தில் வேகமாக வந்த கார் ஒன்று, கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த காரை உரசியதோடு ஆட்டோவில் மோதி கடைக்குள் புகுந்தது.

இதில் ஆட்டோ ஓட்டுநர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். இந்த விபத்தை தொடர்ந்து அவ்வழியாக வந்த மூன்று கார் மற்றும் ஒரு ஸ்கூட்டர் ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்குள்ளானது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்