Chidambaram | டிராக்டர் மீது மோதி நடு ரோட்டிலேயே குப்புற கவிழ்ந்த கார் - உள்ளே துடித்த தாய், மகன்
டிராக்டர் மீது மோதி நடு ரோட்டிலேயே குப்புற கவிழ்ந்த கார் - உள்ளே துடித்த தாய், மகன்
Chidambaram | டிராக்டர் மீது மோதி நடு ரோட்டிலேயே குப்புற கவிழ்ந்த கார் - உள்ளே துடித்த தாய், மகன்
சிதம்பரம் அருகே டிராக்டர் பின்புறத்தில் மோதி சாலை நடுவே தல குப்புற கார் கவிழ்ந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காரைக்காலில் இருந்து சென்னை நோக்கி தாய், மகன் இருவர் காரில் சென்றுள்ளனர். சிதம்பரம் அருகே கற்களை ஏற்றி சென்ற டிராக்டர் பின்புறம் கார் எதிர்பாராத விதமாக மோதியது. மோதிய வேகத்தில் கார் சாலை நடுவே தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் தாய் மற்றும் மகன் லேசான காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர்த்தப்பினர். மேலும் போக்குவரத்து பாதிக்கப்பட்ட நிலையில் போலீசார் மற்றும் நெடுஞ்சாலைத்துறை ஊழியர்கள் பொதுமக்களுடன் இணைந்து காரை அப்புறப்படுத்தினர்.
