நெடுஞ்சாலைக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் கவிழ்ந்த கார் - நொடியில் தப்பிய 2 உயிர்கள்

x

நெடுஞ்சாலைக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்து

கேரள மாநிலம் திருச்சூர் அருகே நெடுஞ்சாலைக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் கார் விழுந்து விபத்துக்குள்ளானது. திருச்சூர் மாவட்டம், முருங்கூர் பகுதியில் தேசிய நெடுஞ்சாலை அமைக்கப்பட்டு வரும் நிலையில், பால வேலைக்காக பள்ளம் தோண்டப்பட்டுள்ளது. ஆனால் கட்டுமானம் நடைபெறும் பகுதிகளில் முறையாக தடுப்புகள் அமைக்கப்படாத நிலையில், அவ்வழியாக வந்த கார் எதிர்பாராதவிதமாக பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. காரில் பயணித்த இருவரும் ஜன்னல் வழியாக வெளியேறி உயிர்தப்பிய நிலையில், காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்