Thoothukudi | அதி வேகமாக வந்து மாணவிகள் மீது மோதிய கார்.. முறிந்த எலும்பு - குமுறும் பெற்றோர்கள்
தூத்துக்குடியில் அதி வேகமாக வந்த கார் மோதி 4 மாணவிகள் காயம் அடைந்த சம்பவத்தில், குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய மாணவிகளின் பெற்றோர் வலியுறுத்தியுள்ளனர். தூத்துக்குடியில் கடந்த 25ஆம் தேதி இரவு, சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த கல்லூரி மாணவிகள் 4 பேர் மீது அதி வேகமாக வந்த கார் மோதிவிட்டு நிற்காமல் சென்றது. மாணவிகள் எலும்பு முறிவு மற்றும் கடுமையான காயத்துடன் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவர்கள் மீது மோதிய கார் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. இந்நிலையில், காரை கண்டுபிடித்து, குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என மாணவிகளின் பெற்றோர் வலியுறுத்தியுள்ளனர்.
Next Story
