கோவையில் சாலையோர கடைக்காரர் மீது மோதிய கார் - பரப்பு காட்சி

கோவையில் சாலையோர கடைக்காரர் மீது மோதிய கார் - பரப்பு காட்சி
Summary

கோவை வீரகேரளம் பகுதியில் சாலையோரக் கடைக்காரர் மீது கார் மோதிவிட்டு நிற்காமல் பறந்த விபத்தின் நெஞ்சை பதறவைக்கும் சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

சாலையோரமாகக் கடை நடத்தி வரும் 53 வயது முதியவர் மணி என்பவர் நேற்று கடையின் முன் நின்றுகொண்டிருந்தபோது, அதிவேகமாக வந்த அடையாளம் தெரியாத கார் அவர் மீது பயங்கரமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு ரத்த வெள்ளத்தில் அலறிய அவரை, மனைவி மற்றும் பொதுமக்கள் மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்துள்ளனர். விபத்தை ஏற்படுத்திவிட்டு மனிதாபிமானமின்றி தப்பியோடிய காரின் ஓட்டுநரை போலீசார் சி.சி.டி.வி காட்சிகளின் அடிப்படையில் வலைவீசித் தேடி வருகின்றனர்.

X

Thanthi TV
www.thanthitv.com