விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற கார் - சிசிடிவி காட்சி
விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற கார் - சிசிடிவி காட்சி
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே, இருசக்கர வாகனம் மீது சொகுசு கார் மோதிய விபத்தில் ஒருவர் படுகாயமடைந்தார்.
சாலைப்புதூரைச் சேர்ந்த மாரி செல்வம், தனது குழந்தைகளைப் பள்ளியிலிருந்து அழைத்து வரச் சென்றபோது, அடைக்கலப்பட்டணம் பகுதியில் இந்த விபத்து நிகழ்ந்தது.
மோதிவிட்டு நிற்காமல் சென்ற கார் டிரைவர் சென்ற நிலையில், சம்பவத்தில் ஈடுபட்ட கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த கார் ஓட்டுநர் பசவராஜை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
#thenkasi #cctv #car #accident #thanthitv
