காவலர்கள் திட்டியதால் வேதனை - ரயில் முன் விழுந்து கார் ஓட்டுனர் தற்கொலை...

சென்னையில் போக்குவரத்து காவலர்கள் திட்டியதால் மனமுடைந்து கால்டாக்சி ஓட்டுனர் ரயிலின் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராஜேஷ் என்ற அந்த ஓட்டுனர் மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரியும் ஒரு பெண் ஊழியரை ஏற்றி சென்ற போது மற்றொருவரை அழைத்து செல்வதற்காக பாடி அருகே காரை நிறுத்தியுள்ளார். அப்போது அங்கு வந்த காவலர்கள் ராஜேஷை தரக்குறைவாக திட்டி காரை சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த ராஜேஷ் அண்மையில் மறைமலைநகர் ரயில் நிலையம் அருகே ரயில் முன் விழுந்து தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து செல்போனில் ராஜேஷ் உருக்கமாக பேசிய வீடியோவை அவரது உறவினர்கள் வெளியிட்டுள்ளனர்.

X

Thanthi TV
www.thanthitv.com