Car | DMK | திமுக Ex MLA-வின் சொகுசு காருக்கு என்னாச்சு? - பரபரப்பு CCTV காட்சி

Car | DMK | திமுக Ex MLA-வின் சொகுசு காருக்கு என்னாச்சு? - பரபரப்பு CCTV காட்சி

முன்னாள் திமுக எம்எல்ஏவின் சொகுசு கார் திருட்டு கள்ளக்குறிச்சி அருகே முன்னாள் எம்எல்ஏவின் சொகுசு கார் திருடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சங்கராபுரம் தொகுதியை சேர்ந்த முன்னாள் எம்எல்ஏ அங்கயர்கன்னியின் டொயோட்டா ஃபார்ச்சூனர் கார், அவரது சொந்த ஊரான தேவபண்டலம் பகுதியில் வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. நேற்று இரவு இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு மர்ம நபர்கள், அதிநவீன கருவி மூலம் காரை திருடிச் சென்றுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், வழக்குப்பதிவு செய்த சங்கராபுரம் காவல் நிலையம் போலீசார், மர்ம நபர்களை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

X

Thanthi TV
www.thanthitv.com