மோதி நொறுங்கிய கார் - கொஞ்சம் கூட சேதமில்லாமல் தப்பிய முருக பக்தர்கள்

x

திருத்தணி முருகன் கோவில் மலைப்பாதையில் உள்ள மின் கம்பத்தின் மீது மோதி கார் விபத்து. போலீசார் விசாரணை.

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் பகுதியைச் சேர்ந்த பூதபாண்டியன், மாடசாமி, ஆகியோர் இருவரும் முருகப்பெருமானின் ஐந்தாம் படை வீடான திருத்தணி முருகன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய தனது காரில் மலைக் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்துவிட்டு பின்னர் மலைக்கோவிலில் இருந்து மலைப்பாதை வழியாக தனது காரில் இருவரும் கீழே இறங்கிய போது திடீரென டயர் பெஸ்ட் ஆகி மலை பாதையில் சாலை ஓரமாக இருக்கும் மின் கம்பத்தின் மீது மோதி காரில் முன் பகுதி கண்ணாடி அப்பளம் போல் நொறுங்கி விபத்து ஏற்பட்டது. மலைப்பாதையில் எதிரே வாகனங்கள் எதுவும் வராததால் காரில் பயணம் செய்தவர்கள் அதிர்ஷ்டவசமாக சிறிய காயம் இன்றி உயிர் தப்பினர். பின்னர் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருத்தணி போலீசார் வழக்கு பதிவு செய்து விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சாமி தரிசனம் செய்துவிட்டு மலைப் பாதையின் வழியாக காரில் வரும்போது விபத்து ஏற்பட்ட சம்பவம் பக்தர்களிடையே பரபரப்பு ஏற்படுத்தியது.


Next Story

மேலும் செய்திகள்