ஓடிக்கொண்டிருக்கும்போதே தீப்பிடித்து எரிந்த கார்- கோயிலுக்கு செல்லும்போது சோகம்

x

ஓடிக்கொண்டிருக்கும்போதே தீப்பிடித்து எரிந்த கார்- கோயிலுக்கு செல்லும்போது சோகம்

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்ற கார் திடீரென தீப்பிடித்து எரிந்தது.

சிவகாசியை சேர்ந்த ரஞ்சித்குமார் தன்னுடைய மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் தன்னுடைய அண்ணன் காரில் தூத்துக்குடி மாவட்டம் காமநாயக்கன்பட்டியில் உள்ள மாதா கோயிலுக்கு சாமி கும்பிட சென்ற போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. காரில் இருந்தவர்கள் உடனடியாக வெளியேறியதால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர். தகவலறிந்து வந்த தீயணைப்பு துறையினர் அரை மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இருப்பினும் கார் முற்றிலும் எரிந்து சேதம் அடைந்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்