12 கிலோ கஞ்சா பொருட்களுடன் 8 கல்லூரி மாணவர்கள் கைது - தப்பி ஓடிய 4 மாணவர்களுக்கு போலீசார் வலை

15 லட்சம் ரூபாய் மதிப்புள்ள செய்யப்பட்டுள்ள சம்பவம் வேலூரில் அரங்கேறியுள்ளது.
12 கிலோ கஞ்சா பொருட்களுடன் 8 கல்லூரி மாணவர்கள் கைது - தப்பி ஓடிய 4 மாணவர்களுக்கு போலீசார் வலை
Published on

வேலூரை அடுத்த காட்பாடியில் இயங்கி வரும் தனியார் பல்கலைக்கழக மாணவர்களான சத்யா , மோனீஸ், பண்டிபுல்லா உள்ளிட்ட 12மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்கு அருகே வீடு வாடகைக்கு எடுத்து தங்கி படித்து வந்துள்ளனர். மாணவர்கள் கஞ்சா விற்பனை செய்து வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அங்கு சென்ற போலீசார், வீட்டை சுற்றி வளைத்தனர். அங்கு கஞ்சா போதையில் இருந்த மாணவர்கள், காவல்துறையினரை மிரட்டியதாக தெரிகிறது. இதையடுத்து போலீசார் நாயை வீட்டிற்குள் பாய விட்டு மாணவர்களை மடக்கி பிடித்துள்ளனர். இருந்தபோதும், முக்கிய குற்றவாளியான ஆந்திராவை சேர்ந்த மித்தா திருமா பாஸ்கர் ரெட்டி என்பவர் உள்பட 3 மாணவர்கள் பின்பக்க கதவு வழியாக தப்பி ஓடியுள்ளனர். மற்ற 8 மாணவர்களை கைது செய்துள்ள போலீசார், வீட்டில் இருந்து 15 லட்சம் மதிப்புள்ள 12 கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.

X

Thanthi TV
www.thanthitv.com