30ம் தேதி இரண்டாம் கட்ட உள்ளாட்சி தேர்தல் - இன்று மாலையுடன் ஓய்கிறது பிரசாரம்

இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரசாரம் இன்று மாலையுடன் நிறைவடைகிறது.
30ம் தேதி இரண்டாம் கட்ட உள்ளாட்சி தேர்தல் - இன்று மாலையுடன் ஓய்கிறது பிரசாரம்
Published on

முதல்கட்ட உள்ளாட்சி தேர்தல் நிறைவடைந்த நிலையில் 30ம் தேதியன்று இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெற உள்ளது. இரண்டாம் கட்ட தேர்தலில் 4 ஆயிரத்து 924 கிராம ஊராட்சி தலைவர் பதவி இடங்கள் 38 ஆயிரத்து 916 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவி இடங்கள் 2 ஆயிரத்து 544 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவி இடங்கள் மற்றும் 255 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவி இடங்களுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெறும் பகுதிகளில் இன்று மாலையுடன் பிரசாரம் நிறைவடைகிறது. எனவே, வேட்பாளர்களும் அரசியல் கட்சியினரும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

X

Thanthi TV
www.thanthitv.com