Campaign | Death | EPS பிரச்சார கூட்டத்தில் மயங்கி விழுந்தவர் உயிரிழப்பு.. குவிந்த அதிமுகவினர்
ஈபிஎஸ் கூட்டத்திற்கு வந்தவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு
ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையத்தில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியில் பிரச்சாரக் கூட்டத்திற்கு வந்திருந்த அர்ஜுனன் என்பவர் மயங்கி விழுந்து உயிரிழந்தார். எடப்பாடி பழனிசாமி வருவதற்கு முன்பு, திடலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இசை நிகழ்ச்சி மேடை அருகே நின்று கொண்டிருந்தபோது அவர் திடீரென மயங்கி விழுந்தார். அவரை கோபி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, வரும் வழியிலேயே அவர் இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். முன்னாள் அமைச்சர் கே.சி.கருப்பண்ணன் உள்ளிட்ட அதிமுகவினர், மருத்துவமனைக்குச் சென்று, உயிரிழந்த அர்ஜுனின் உறவினர்களுக்கு ஆறுதல் தெரிவித்தனர்.
Next Story
