நண்பனை பார்க்க சென்னை வந்த இளைஞர் கோர மரணம்

x

சென்னை திருவான்மியூர் அருகே நண்பரை பார்த்து விட்டு திரும்பிய போது பைக் விபத்தில் சிக்கி இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுப்பாக்கத்தை சேர்ந்தவர்கள் வசந்தகுமார் மற்றும் அமீருதீன். இவர்கள் மடிப்பாக்கத்தில் உள்ள நண்பரான பிரசாந்த் ராஜ் என்பவரை பார்த்து விட்டு இருசக்கர வாகனத்தில் மத்திய கைலாஷ் பகுதி அருகே சென்று கொண்டிருந்த போது, திடீரென கட்டுப்பாட்டை இழந்த பைக், பிளாட்பாரத்தில் மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே வசந்தகுமார் உயிரிழந்த நிலையில் அமீருதீன் படுகாயம் அடைந்தார். இந்த விபத்து குறித்து கிண்டி போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்