கிரிண்டரில் அழைப்பு - உல்லாசத்துக்கு சென்ற நபரிடம் பணம் பறிப்பு - 2 சிறார்கள் கைது
திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் அருகே கிரிண்டர் செயலியில் தொடர்புகொண்டு உல்லாசமாக இருக்க சென்ற நபரிடம் இருந்து செல்போன் மற்றும் பணத்தை ஒரு கும்பல் பறித்துச் சென்றுள்ளது. வெள்ளைக்குட்டை பகுதியைச் சேர்ந்த கோடீஸ்வரன் என்பவர் கிரிண்டர் செயலி மூலம் தன்ராஜ் என்பவரை தொடர்புகொண்டு, கோவிந்தராஜ் என்பவரை தன்ராஜுக்கு அறிமுகப்படுத்தி உள்ளார். கோவிந்தராஜும், தன்ராஜும் தேக்கு தோப்பில் உல்லாசமாக இருந்ததாக தெரிகிறது. அப்போது, அங்கு நண்பர்களுடன் வந்த கோடீஸ்வரன், தன்ராஜை மிரட்டி செல்போன் மற்றும் 6 ஆயிரத்து 500 ரூபாய் பணத்தை பறித்துச் சென்றுள்ளார். இது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் 2 சிறார்களை கைது செய்த போலீசார், மேலும் இருவரை தேடி வருகின்றனர்.
Next Story
