5,300 ஆசிரியர்கள் பணிக்கு திரும்பவில்லை - பணிக்கு திரும்பாத ஆசிரியர்கள் எண்ணிக்கை கணக்கீடு

நேற்று மாலை வரை 5 ஆயிரத்து 300 ஆசிரியர்கள் பணிக்கு திரும்பவில்லை என கணக்கிடப்பட்டுள்ளது
5,300 ஆசிரியர்கள் பணிக்கு திரும்பவில்லை - பணிக்கு திரும்பாத ஆசிரியர்கள் எண்ணிக்கை கணக்கீடு
Published on

பழைய ஓய்வூதிய திட்டத்தையே தொடர வேண்டும், மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான சம்பளம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட ஒன்பது கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ அமைப்பு சார்பில் வேலைநிறுத்தப் போராட்டம் தொடங்கப்பட்டது.

* இதில் ஆயிரக்கணக்கான அரசு ஆசிரியர்களும், அரசு ஊழியர்களும் பங்கேற்றனர். இதனால் பள்ளி மாணவர்களின் கல்வி பாதிக்கும் நிலை இருப்பதால் போராட்டத்தை கைவிட வேண்டும் என அரசு வலியுறுத்தியது. தேர்வு நேரம் என்பதால் மாணவர்களின் நலன் கருதி போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர அரசும், ஜாக்டோ ஜியோ அமைப்பும் முயற்சிக்க வேண்டும் என நீதிமன்றம் தெரிவித்தது.

* ஏற்கனவே மூன்று முறை பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுவிட்டதாக தமிழக அரசும், பேச்சுவார்த்தை நடத்தினால் போராட்டத்தை கைவிடுவோம் என ஜாக்டோ ஜியோ அமைப்பும் ஒருவரை ஒருவர் கைக்காட்டுகின்றன.

* இந்நிலையில், பணிக்கு திரும்ப நேற்று மாலை வரை அவகாசம் அளிக்கப்பட்ட நிலையில், அதுவரை பணிக்கு வராத ஆசிரியர்களின் எண்ணிக்கை கணக்கிடப்பட்டுள்ளது. அதன்படி, பள்ளி கல்வித்துறையில் 950 பேரும், தொடக்கக்கல்வித்துறையில் 4 ஆயிரத்து 350 பேரும் கடைசி வரை பணிக்கு வரவில்லை என்பது தெரியவந்துள்ளது. அவர்கள் மீது 17பி பிரிவின் கீழ் நடவடிக்கை எடுப்பது குறித்து அரசு ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com