மெடிக்கலில் மயங்கி விழுந்து கேபிள் உரிமையாளர் உயிரிழப்பு - விசாரணை

மெடிக்கலில் மயங்கி விழுந்து கேபிள் உரிமையாளர் உயிரிழப்பு - விசாரணை

மேட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த சாமிநாதன், கேபிள் தொழில் செய்து வந்த நிலையில், மருந்து வாங்குவதற்காக மெடிக்கலுக்கு சென்றுள்ளார். அங்கு நின்று கொண்டிருந்தபோது திடீரென மயங்கி கீழே விழுந்தார்.

இதையடுத்து, மெடிக்கல் உரிமையாளர் மற்றும் அங்கிருந்தவர்கள் உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

ஆனால், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, மெடிக்கலில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் சாமிநாதன் திடீரென மயங்கி விழும் காட்சிகள் பதிவாகியுள்ளன

X

Thanthi TV
www.thanthitv.com