குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தமிழகம் முழுவதும் போராட்டம்

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக, தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெற்றது.
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தமிழகம் முழுவதும் போராட்டம்
Published on

சென்னையில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராடியவர்கள் மீது, தடியடி நடத்திய சம்பவத்தை கண்டித்து நெல்லை மேலப்பாளையத்தில் இஸ்லாமிய அமைப்புகள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தின. ராமநாதபுரத்தில், பாரதி நகர் அருகே இஸ்லாமிய அமைப்புகளைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டம் செய்தவர்கள் டிஐஜி அலுவலகம் நோக்கி ஊர்வலமாக செல்ல முயன்றதால், போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். பவானியில், மனித நேய மக்கள் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட், திராவிட விடுதலை கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என்றும் முழக்கங்கள் எழுப்பட்டன. தஞ்சை மாவட்டம், கும்பகோணம் அருகே, திருபுவனம் கடைவீதியில், போலீசாரை கண்டித்தும் மத்திய அரசை கண்டித்தும் இஸ்லாமிய அமைப்பினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பல பெண்கள் குழந்தைகளுடன் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

பாலக்கரை : இஸ்லாமிய அமைப்பினர் போராட்டம்

திருச்சி, பாலக்கரையில் சி.ஏ.ஏ, எம்.பி.ஆர், என்.ஆர்.சிக்கு எதிராக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இதற்கு ஆதரவு தெரிவித்து, அரசியல் கட்சியினரும் போராட்டத்தில் கலந்து கொண்டனர். வண்ணாரப்பேட்டையில் தடியடி நடத்திய காவலர்கள் மீது நடவடிக்கை எடுப்பதோடு, சி.ஏ.ஏ க்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.

X

Thanthi TV
www.thanthitv.com