

சி.ஏ.ஏ சட்டத்திற்கு எதிராக தமிழக அரசு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தி, இஸ்லாமிய அமைப்பினர், வரும் 19-ம் தேதி சட்டபேரவை முற்றுகை போராட்டத்தை அறிவித்துள்ளனர். இந்த போராட்டத்திற்கு தடை விதிக்ககோரி, இந்திய மக்கள் மன்ற தலைவர் வராகி சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்தார். இந்த முறையீட்டை கேட்ட தலைமை நீதிபதி அமர்வு, மனுவாக தாக்கல் செய்தால் விசாரிப்பதாக தெரிவித்தார்.இதையடுத்து வராகி மனுத்தாக்கல் செய்துள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.