

திருச்சியில், குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பபெற வலியுறுத்தி, மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டது. இதை திமுக முதன்மைச் செயலாளர் கே.என் நேரு தொடங்கி வைத்தார். உறையூர், கருமண்டபம் மற்றும் எடமலைப்பட்டிபுதூர் உள்ளிட்ட பகுதிகளில் இந்த கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.