சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதில் தமிழகம் முதன்மையான மாநிலம் - சென்னை காவல்ஆணையர் ஏகே விஸ்வநாதன்

சென்னை வண்ணாரப்பேட்டையில் நேற்று நடைபெற்ற போராட்டத்தில் காயமடைந்தவர்களை மாநகர காவல் ஆணையர் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

சென்னை வண்ணாரப்பேட்டையில் நேற்று நடைபெற்ற போராட்டத்தில், காயமடைந்த அடிபட்ட காவல் ஆய்வாளர் மற்றும் பெண் காவலர்களை மாநகர காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும்,

பெண் காவலர்கள் உதயகுமாரி, கலா மற்றும் காவல் ஆய்வாளர் ராஜ் குமார் ஆகியோரை சந்தித்து நலம் விசாரித்த அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, தவறான செய்திகளை பரப்ப வேண்டாம் என வேண்டுகோள் விடுத்தார்.

X

Thanthi TV
www.thanthitv.com