பட்டய கணக்காளர் தேர்வு - மாணவர்களுக்கு கூடுதல் வாய்ப்பு?

ஜூலை 31 ஆம் தேதி நடைபெற உள்ள பட்டய கணக்காளர் தேர்வுகளை விரும்பும் மாணவர்கள் மட்டும் எழுதலாம் என பட்டய கணக்காளர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது
பட்டய கணக்காளர் தேர்வு - மாணவர்களுக்கு கூடுதல் வாய்ப்பு?
Published on

ஜூலை 31 ஆம் தேதி நடைபெற உள்ள பட்டய கணக்காளர் தேர்வுகளை விரும்பும் மாணவர்கள் மட்டும் எழுதலாம் என்றும், ஜூலையில் எழுத இயலாத மாணவர்கள் opt-out என்கின்ற தெரிவினை செய்து, நவம்பர் மாதத்தில் நடத்தப்படும் தேர்வுகளில் பங்கேற்கலாம் என பட்டய கணக்காளர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது. பட்டயக் கணக்கர் தேர்வில் பங்கேற்க ஜூலை மாதத்தோடு முடியும் கெடுவை, நவம்பர் மாதம் வரை நீட்டித்து உள்ளதாகவும், இந்திய பட்டயக் கணக்காளர் சங்கம் தெரிவித்துள்ளது. மே மாதம் நடைபெற இருந்த பட்டயக் கணக்காளர் தேர்வு ஜூன் மாதத்திற்கும், பின்னர் இரண்டாவது முறையாக ஜூலை மாதத்திற்கும் ஒத்தி வைக்கப்பட்ட நிலையில் இந்த புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com