

விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றதை அடுத்து, வாக்காளர்களுக்கு நடிகர் சரத்குமார் நன்றி தெரிவித்துள்ளார். இது குறித்து சமூக வலைத்தளத்தில் கருத்து பதிவிட்டுள்ள அவர், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கும், அமைச்சர்கள் மற்றும் , இடைத்தேர்தல் வெற்றிக்காக உழைத்த சமத்துவ மக்கள் கட்சியினருக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.