2 தொகுதி இடைத்தேர்தல் முடிவு குறித்து பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிக்கை

விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தல் முடிவுகள் வருங்கால அரசியலுக்கான நல்ல தொடக்கம் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
2 தொகுதி இடைத்தேர்தல் முடிவு குறித்து பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிக்கை
Published on
விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தல் முடிவுகள் வருங்கால அரசியலுக்கான நல்ல தொடக்கம் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுக தலைவர் ஸ்டாலினின் பொய் வணிகம் மக்களிடம் போணியாகவில்லை என குறிப்பிட்டுள்ள அவர், மக்களை ஏமாற்ற நினைத்த திமுக கூட்டணிக்கு அவர்கள் சரியான பாடம் புகட்டி உள்ளதாக தெரிவித்துள்ளார். இரு தொகுதிகளிலும் அமோக வெற்றி பெற்றுள்ள அதிமுக வேட்பாளர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ள அவர், அவர்களின் வெற்றிக்கு பெருமளவில் பா.ம.க. பங்களித்திருப்பது மகிழ்ச்சியளிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
X

Thanthi TV
www.thanthitv.com