"நாளை FasTag உடன் வாங்க"-அரசு பேருந்துகளை நிறுத்தி அறிவுரை கூறிய டோல்கேட் நிர்வாகம்

x

தென் மாவட்டங்களில் உள்ள நாலு சுங்கச்சாவடிகள் வழியாக இன்று முதல் அரசு பேருந்துகள் செல்ல நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில் மதுரை கப்பலூர் பகுதியில் உள்ள சுங்கச்சாவடியில் இன்று காலை முதல் பாஸ்ட் ட்ராக் இல்லாமல் வரக்கூடிய நகர அரசு பேருந்துகளை நிறுத்தி நீதிமன்ற உத்தரவு வந்துள்ளதால் நாளை வரும்போது பாஸ்ட் டாக் உடன் வரவேண்டும் என்றும் ஓட்டுநர் மற்றும் நடத்துனரின் பெயர் விவரங்கள் பேருந்து செல்லக்கூடிய வழித்தடம் உள்ளிட்ட விவரங்களை பெற்றுக்கொண்டு ஓட்டுநரிடம் கையெழுத்து பெற்று அறிவுறுத்தி அனுப்பி வருகின்றனர்.

அரசு பேருந்துகளுக்கான பாஸ்ட் ட்ராக் விவகாரத்தில் சட்ட வல்லுனர்களுடன் ஆலோசனை நடத்தி பொதுமக்களுக்கு பாதிப்பு இல்லாத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் சிவசங்கர் நேற்று தெரிவித்திருந்த நிலையில் இன்று காலை முதலே மதுரை கப்பலூர் பகுதியை கடக்க கூடிய பாஸ்ட் ட்ராக் இல்லாத நகர அரசு பேருந்துகள் நிறுத்தப்பட்டு ஓட்டுனர் விவரங்கள் பெற்ற பிறகு நாளை கட்டாயம் பாஸ்ட்டாகுடன் வர வேண்டும் என அறிவுறுத்தி அனுப்பப்படுவது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்