Tiruppur | Bus | அதிவேகமாக சென்று விபத்தில்​ சிக்கிய பேருந்து - வாகனங்கள் சேதம்

அதிவேகமாக சென்று விபத்தில்​ சிக்கிய பேருந்து - வாகனங்கள் சேதம்

Tiruppur | Bus | அதிவேகமாக சென்று விபத்தில்​ சிக்கிய பேருந்து - வாகனங்கள் சேதம்

திருப்பூரில் அதிவேகமாக வந்த அரசு பேருந்து, சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த சரக்கு ஆட்டோ, எலக்ட்ரிக் இருசக்கர வாகனம் மற்றும் மின்கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இன்று அதிகாலை டிப்போவில் இருந்து புதிய பேருந்து நிலையம் நோக்கி சென்ற பேருந்து, நெசவாளர் காலனி அருகே கட்டுப்பாட்டை இழந்து அடுத்தடுத்து வாகனங்கள் மீது மோதியுள்ளது. இதில் ஆட்டோ மற்றும் இருசக்கர வாகனங்கள் பலத்த சேதமடைந்ததுடன், மின்கம்பமும் வளைந்து சேதமடைந்தது.

அதிகாலை நேரம் என்பதால் பேருந்தில் பயணிகள் இல்லாத நிலையில், உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது. விபத்தை ஏற்படுத்திய ஓட்டுநர் அங்கிருந்து தப்பிய நிலையில், திருப்பூர் வடக்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

#Tiruppur #Bus #CCTV #TNPolice #thanthitv

X

Thanthi TV
www.thanthitv.com