ஆலங்கட்டி அட்டாக்கில் ஓட்டையான பஸ் ஸ்டாப்... மிரட்டல் சம்பவம்

x

பாப்பிரெட்டிப்பட்டி பகுதியில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக பெய்த ஆலங்கட்டி மழையால் பேருந்து நிழற்குடையின் மேற்கூரைகள் சேதமடைந்தன. 2 மாதங்களுக்கு மேலாக தருமபுரி மாவட்டத்தில் கடுமையான வெப்பம் வீசி வந்த நிலையில் திடீரென பெய்த கனமழையால் மக்கள் மகிழ்சியடைந்தனர். மேலும் பாப்பிரெட்டிப்பட்டி பொம்மிடி ஆகிய இடங்களில் ஆங்காங்கே ஒரு மணி நேரத்திற்கு மேலாக பெய்த ஆலங்கட்டி மழையில் பேருந்து நிழற்குடை மற்றும் சிலரின் வீட்டு சிமெண்ட் கூரைகள் உடைந்து சேதமடைந்தன.


Next Story

மேலும் செய்திகள்