BUS | MLA | VILLAGE | கிராம மக்களின் நீண்ட நாள் கனவை நிறைவேற்றி, MLA செய்த நெகிழ்ச்சி செயல்
கிராம மக்களின் நீண்ட நாள் கனவை நிறைவேற்றி, MLA செய்த நெகிழ்ச்சி செயல்
ஒசூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பேரிகை அருகே மாநில எல்லையில் உள்ளது எலுவப்பள்ளி என்ற குக்கிராமம். இந்த கிராமத்தின் வழியாக அரசு பேருந்து இயக்கப்பட வேண்டும் என்பது கிராம மக்களின் நீண்ட நாள் கனவாக இருந்தது.
கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் ஒசூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்ட திமுகவை சேர்ந்த ஒய்.பிரகாஷிடம் எலுவப்பள்ளி கிராம மக்கள் அரசு பேருந்தை தங்களது கிராமத்திற்குள் இயக்க வேண்டும் கோரிக்கை விடுத்திருந்தனர். சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று எம்எல்ஏவான அவர் எலுவப்பள்ளி கிராமத்திற்குள் அரசு பேருந்தை இயக்கிட தமிழக சட்டமன்றத்தில் குரல் கொடுத்திருந்தார். அதன் அடிப்படையில் இன்று முதன் முறையாக பேரிகையிலிருந்து எலுவப்பள்ளி வழியாக திம்மசந்திரம் பகுதிக்கு 31 ஆம் எண் கொண்ட அரசு பேருந்து சேவை தொடங்கப்பட்டது.
பேருந்தே செல்லாத எலுவப்பள்ளி கிராமத்திற்குள் முதல்முறையாக அரசு பேருந்து வந்ததை அந்த கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். அப்போது பேருந்தை அலங்கரித்து பேருந்திற்கு திருஷ்டி கழித்து இனிப்புகளை வழங்கி கிராம மக்கள் சந்தோசத்தை வெளிப்படுத்தினர். அதனைத் தொடர்ந்து பேருந்து சேவையை துவக்கி வைத்த எம்எல்ஏ பிரகாஷ் கிராம மக்களை பேருந்தில் ஏற்றி ஒரு ரவுண்ட் அழைத்து சென்றதும் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பெரும் மகிழ்ச்சி அடைந்தனர்.
