Bus | Kovai | ViralVideo | பஸ் டோரில் சிக்கிய Bag.. வெளியே தொங்கிய படி பயணம்.. அதிர்ச்சி வீடியோ

Bus | Kovai | ViralVideo | பஸ் டோரில் சிக்கிய Bag.. வெளியே தொங்கிய படி பயணம்.. அதிர்ச்சி வீடியோ

Bus | Kovai | ViralVideo | பஸ் டோரில் சிக்கிய Bag.. வெளியே தொங்கிய படி பயணம்.. வெளியான அதிர்ச்சி வீடியோ

கோவை லட்சுமி மில் பகுதியில் இருந்து நவ இந்தியா நோக்கி சென்ற அரசு பேருந்தில், பயணியின் பேக் பின்பக்க கதவில் சிக்கி, வெளிப்புறத்தில் தொங்கியபடியே பேருந்து இயக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பேருந்தில் பின்பக்க கதவு வழியாக ஏறிய பயணி ஒருவரின் பேக், கதவு மூடப்பட்டபோது அதில் சிக்கிக் கொண்டதாக கூறப்படுகிறது. இதனை ஓட்டுநர் கவனிக்காமல் பேருந்தை தொடர்ந்து இயக்கியதால், பயணியின் பேக் மட்டும் பேருந்தின் வெளிப்புறத்தில் தொங்கியபடி சாலையில் சென்றுள்ளது. பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், பேருந்துகளை இயக்குவதற்கு முன்பு கதவுகள் முறையாக மூடப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

X

Thanthi TV
www.thanthitv.com