சாலையின் நடுவே 3 பேருந்துகளை நிறுத்தி தகராறு - பேருந்து ஊழியர்களால் போக்குவரத்து நெரிசல்

மதுரை மாவட்டம் திருமங்கலம் பேருந்து நிலையம் முன்பு தனியார் பேருந்து ஊழியர்கள் தகராறில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.
சாலையின் நடுவே 3 பேருந்துகளை நிறுத்தி தகராறு - பேருந்து ஊழியர்களால் போக்குவரத்து நெரிசல்
Published on
மதுரை மாவட்டம் திருமங்கலம் பேருந்து நிலையம் முன்பு தனியார் பேருந்து ஊழியர்கள் தகராறில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது. பயணிகளை ஏற்றுவது மற்றும் உரிய நேரத்தை தாண்டி புறப்படுவது உள்ளிட்ட காரணங்களால் ஒரு வாரமாக இருதரப்பினர் இடையே தகராறு இருந்துள்ளது. இதைத் தொடர்ந்து சாலையின் நடுவே 3 பேருந்துகளை நிறுத்திய ஊழியர்கள், கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் கைகலப்பானது. இதனால் இருபுறமும் வாகனங்கள் சாலையில் தேங்கின. வாகன ஓட்டிகள், பள்ளி மாணவர்கள் பெரும் அவதிக்கு ஆளாகினர். போக்குவரத்து போலீசார் இல்லாத நிலையில் தகவலறிந்து வந்த திருமங்கலம் போலீசார், போக்குவரத்தை சீர் செய்து, தகராறில் ஈடுபட்டவர்களை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.
X

Thanthi TV
www.thanthitv.com