பஸ் நேருக்கு நேர் மோதி கோரம் - சிதைந்த கார்.. துடி துடித்து பிரிந்த 4 உயிர்கள்

x

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே அரசு பேருந்தும், ஆம்னி காரும் மோதிய விபத்தில்

4 பேர் உயிரிழந்தனர். மேலும் 3 பேர் படுகாயங்களுடன் திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். பாண்டி கருவேப்பஞ்சேரி பகுதியில் அதிகாலையில் ராமநாதபுரம் நோக்கி சென்ற பேருந்தும், கேரளாவில் இருந்து வேளாங்கண்ணிக்கு சுற்றுலா வந்த ஆம்னி காரும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

இதில் ஆம்னி வேனில் பயணித்த 4 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்..


Next Story

மேலும் செய்திகள்