Chengalpattu | Accident | வயலுக்குள் கவிழ்ந்த பஸ்... தெய்வமாக உதவிய ஊர்மக்கள்..

x

மதுராந்தகம் அருகே சாலையோரம் உள்ள வயல்வெளியில் கவிழ்ந்த அரசு பேருந்து பத்துக்கும் மேற்பட்டோர் காயம் செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த சூனாம்பேடு பகுதியிலிருந்து அச்சரப்பாக்கம் சென்று கொண்டிருந்த தடம் எண் T21 அரசு பேருந்து அரசூர் என்னும் கிராமத்தில் ஓட்டுனர் கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரமாக உள்ள மின் கம்பத்தில் மோதி வயல்வெளியில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் அரசு பேருந்தில் பயணம் செய்த 20க்கும் மேற்பட்ட பயணிகளில் 10க்கும் மேற்பட்டோர் காயம்பட்டனர்

பேருந்து கவிழ்ந்ததை பார்த்த கிராம மக்கள் உடனடியாக சென்று விபத்தில் காயமடைந்தவர்களை 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர், விபத்தில் காயமடைந்தவர்கள் சூனாம்பேடு அரசு மருத்துவமனையில் முதல் சிகிச்சை பெற்று மேல் சிகிச்சைக்கு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர், தகவல் அறிந்து வந்த சூனாம்பேடு போலீசார் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர், அரசு பேருந்து சாலை ஓரம் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்