பற்றியெரியும் கப்பல்.. நடுக்கடலில் குழந்தையுடன் குதித்த நபர் - பதறவைக்கும் உயிர் போராட்டம்
இந்தோனேஷியா, மனோடாவில் இருந்து தஹூடா நோக்கி 280க்கும் மேற்பட்டோருடன் சென்ற சுற்றுலா கப்பலில் திடீரென தீப்பற்றி எரிந்தது. தீ மலமலவென கப்பல் முழுவதும் பரவியதால் கப்பலில் இருந்த ஏராளமானோர் உயிர் தப்ப கடலில் குதித்தனர். தகவல் அறிந்த மீட்புப் படையினர் , பேரிடர் கால மீட்பு குழுவினர் உடனடியாக அந்த இடத்துக்கு வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.
இந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்த நிலையில் 150க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டனர். 100க்கும் மேற்பட்டவர்கள் காணாமல் போன நிலையில் தேடும் பணி தீவிரமாக நடைப்பெற்று வருகிறது.
Next Story
