Madurai Latest News | மதுரையில் பகீர் சம்பவம்

மதுரையில் தொழிலதிபர் வீட்டின் பூட்டை உடைத்து 120 சவரன் தங்க நகைகள், 2 கிலோ வெள்ளிப் பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை சத்திரபட்டி பகுதியில் வசிக்கும் காயத்ரி என்பவர் நேற்று மதியம் வீட்டைப் பூட்டிவிட்டு வெளியே சென்ற நிலையில், வீட்டின் பின்பக்க பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் பூரோவில் இருந்து சுமார் 120 சவரன் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளனர். இதேபோல, 2 கிலோ வெள்ளி மற்றும் 4 லட்சம் ரூபாய் ரொக்க பணத்தையும் மர்ம நபர்கள் திருடிச்சென்றுள்ளனர். இதுகுறித்து காயத்ரி அளித்த புகாரின் பேரில் சத்திரப்பட்டி காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து, கைரேகை மற்றும் தடயவியல் நிபுணர்களின் உதவியுடன் கொள்ளையில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

X

Thanthi TV
www.thanthitv.com