வீரர்களின் பிடியில் சிக்காமல் திக்குமுக்காடச் செய்த காளைகள்

x

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கிடக்குளம் கிராமத்தில் நடைபெற்ற வடமாடு மஞ்சுவிரட்டில் பல்வேறு பகுதிகளில் இருந்து 13 காளைகள் பங்கேற்றன. இதில் சுமார் 117 மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டனர். சில காளைகள் மாடுபிடி வீரர்கள் பிடியில் சிக்காமல் வீரர்களை திக்குமுக்காடச் செய்து பரிசுகளை வென்றன. இந்த வடமாடு மஞ்சுவிரட்டை சுற்று வட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் ஆராவாரத்துடன் கண்டு ரசித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்